சீனாவின் போர் விமானங்கள் இரண்டாம் நாளாகத் தைவான் நீரிணையைக் கடந்து தைவான் எல்லைக்குள் சென்றதால் இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசியல், ராணுவம் ஆகிய இருவகைகளிலும் சீனாவுக்குப் போட்டியாக உள்ள அமெரிக்காவுடன் தைவான் நெருக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் தைவானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனாவின் 18 போர் விமானங்கள் தைவான் நீரிணையைக் கடந்து தைவான் எல்லைக்குள் பறந்தன. இதையடுத்துச் சீன விமானங்கள் அத்துமீறினால் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகும் எனத் தைவான் எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையை மீறி அடுத்த நாளே சீன விமானப்படையின் 19 போர் விமானங்கள் மீண்டும் தைவான் எல்லைக்குள் பறந்தன. இதனால் அவற்றைச் சமாளிக்கும் வகையில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைத் தைவான் தயார் நிலையில் வைத்துள்ளது.