ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கைது வாரண்டுகளை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நவாஸ் வசிக்கும் நிலையில், ஊழல் வழக்குகளில் நேரில் ஆஜராக விலக்கு கோரி விண்ணப்பித்திருந்தார்.
இதை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், தற்போது நவாசை கைது செய்து 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த வாரண்டுகள், பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.