தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் திடீர் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பனிப்பொழிவால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
அமேசான் வனப்பகுதியில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு மாறுபட்டதன் விளைவாக ஏற்பட்ட இந்த அரிதான பனிப்பொழிவை எல் அல்டோ, லா பாஸ் நகர வாசிகள் கண்டுகளித்தனர்.
பனிப்பொழிவின் காரணமாக கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவான வெப்பநிலை பதிவானதாக தெரிவித்த வானிலை ஆராய்ச்சியாளர்கள், வரும் வாரங்களில் வெப்பநிலை பூஜ்ய டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என கணித்துள்ளனர்.