ஸ்பெயினில் நீச்சல் வீரர் ஒருவர் கடலுக்குள் விட்ட காற்றுக் குமிழில் சிக்கிய ஜெல்லி மீன் சுற்றிச் சுழன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
அங்குள்ள பலாரிக் தீவுக்கு அருகில் உள்ள இபிஸா கடல் பகுதியில் இளைஞர் ஒருவர் கடலுக்குள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது குழல் மூலம் நீருக்குள் காற்றுக் குமிழியை உருவாக்கினார். அங்கு நீந்திக் கொண்டிருந்த ஜெல்லி மீன் ஒன்று குமிழியைக் கண்டதும் ஆர்வத்துடன் அருகில் செல்ல, நீரின் சுழற்சியால் அந்த மீன் குமிழியில் சிக்கிக் கொண்டது.
அடுத்த நொடியில் இழுக்கப்பட்ட அந்த ஜெல்லி மீன் காற்றுக் குமிழியிள் வளையத்தில் சிக்கி அதிவேகத்துடன் சுற்றிச் சுழன்றது. இறுதியில் அந்த வளையம் உடைந்து போனதால் ஜெல்லி மீன் அங்கிருந்து தப்பிச் சென்றது.