கொரோனா வைரஸுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது மாதம் ஒன்றிற்கு சராசரியாக 1 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதை 15 லட்சமாக அதிகரிக்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருட இறுதிக்குள் மாதத்திற்கு 60 லட்சம் தடுப்பூசிகள் வரை தயாரிக்க ரஷ்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாஸ்கோவின் கமாலியா நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, 7-ல் ஒருவருக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தியதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.