ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தேவையான கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கப்படும் என, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தடுப்பூசிக்கான ஆராய்ச்சியில் அமெரிக்கா முன்னணியில் இருப்பதாகவும், மருந்து அறிமுகமானதும் ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும், மருந்து உற்பத்தி தொடங்கியதும், ராணுவத்தின் மூலம் வேகமாக வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.