வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா போன்ற உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது குறித்த ஆராய்ச்சிப் பணிகளை நாசா துரிதப்படுத்தி உள்ளது.
வெள்ளி கிரகத்தில் சிறிய அளவிலான மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளதாக ஹவாய் மற்றும் சிலியில் இருக்கும் இரண்டு பெரிய தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் விளைவாக செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்று சோதனைகள் செய்து வந்த நாசா, தனது ஆராய்ச்சியை வெள்ளி கிரகத்திற்கு திருப்பி உள்ளது.
அந்த வகையில் வெள்ளி கிரகத்திற்கு தனது சின்ன ரோவர் மற்றும் ஆர்பிட்டர் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.