தைவானில் நடந்த அமெரிக்க மூத்த அதிகாரியின் உயர்மட்ட கூட்டத்தால் எரிச்சலடைந்துள்ள சீனா, தீவுக்கு அருகே போர் பயிற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனா உரிமை கோரி வரும் தைவானுக்கு 3 நாள் பயணமாக பொருளாதார விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் கீத் கிராச் வந்துள்ள நிலையில், தலைநகர் தைபேயில் அவர் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
தைவானுக்கும் அமெரிக்காவுக்கு இடையிலான நெருக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவின் மிக மூத்த அதிகாரியின் வருகை புரிந்துள்ள நிலையில், தைவான் ஜலசந்திக்கு அருகே வான்வழி மற்றும் கடல் சார் ராணுவப்பயிற்சிகளை சீனா தொடங்கி உள்ளது.