ஹாங்காங்கில், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஓஷன் தீம் பார்க் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 26 ஆம் தேதி மூடப்பட்ட பொழுது போக்கு பூங்கா, கடந்த ஜூன் 13 ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்ததையடுத்து ஓஷன் தீம் பார்க்கில் ஜூலை 17 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹாங்காங்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்களாக குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளுடன் பார்கள், நீச்சல் குளங்கள், தீம் பார்க்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், ஓஷன் தீம்பார்க்கில் அடுத்த மாதம் முதல் ஹைகிங், யோகா உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.