கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை அறிய ட்ரம்ப் கூறுவதை நம்பாமல், விஞ்ஞானிகளை நம்புங்கள் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரில் உரையாற்றி அதிபர் டொனால்டு ட்ரம்ப், அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்றும் அதன் பிறகு நாட்டில் கொரோனா பாதிப்பு மறைந்து போகும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் அதே மாநிலத்தில் மூசிக் நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜோ பிடன், ட்ரம்பின் உரையை ஆட்சேபிக்கும் வகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் நாடு உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பாது என்று கூறினார்.