ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து மோசமான சூழல் உருவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்த பிராந்தியத்திற்கான இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் (Hans Kluge), கடந்த இரண்டு வாரங்களாக அங்கு கொரோனா பாதிப்பு 10 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இது எதிர் வரும் அபாயத்தை எச்சரிக்கும் விதமாக உள்ளதாகவும், பொருளாதார சரிவை கருத்தில் கொண்டு ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளே இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தேவை என்றும், ஹான்ஸ் க்ளூக் குறிப்பிட்டுள்ளார்.