சீன ஆய்வுக் கப்பல் ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வந்து சென்றதை இந்திய கடற்படை கண்டுபிடித்துள்ளது.
யுவான் வாங் என்ற ஆய்வுக் கப்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் மலாக்கா நீரிணையை கடந்து, இந்திய கடல் பகுதிக்குள் வந்துள்ளது. சீன கப்பலை, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய போர் கப்பல்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளன.
சில நாட்களுக்கு பின் அந்த கப்பல் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்திய கடல்சார் நிலப்பரப்பு பற்றிய முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சீன ஆராய்ச்சி கப்பல்கள் தொடர்ந்து இந்திய கடல் பகுதியில் பயணம் செய்வதாக கருதப்படுகிறது.
லடாக்கில் எல்லை பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரத்தில் சீன கப்பல் ஆய்வு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.