கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, ஹாங்காங்கில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கடலில், டால்பின்கள் அதிகம் தென்பட துவங்கி உள்ளன.
சீனாவின் தன்னாட்சி பிரதேசங்களான ஹாங் காங் மற்றும் macau-விற்கு இடையே இருந்து வந்த அதிவிரைவு படகு போக்குவரத்து சேவைகளால், அப்பகுதியில் வசித்த டால்பின்கள் ஆழ்கடலுக்குச் சென்றன.
தற்போது ஊரடங்கால், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கடல் அமைதியாகி உள்ளதால், ஏறத்தாழ 5 வருடங்களுக்குப் பின் டால்பின்கள் ஹாங் காங் கடற்கரை அருகே நீந்தி வருவதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.