ரஷ்யாவில் பேச்சுவார்த்தைக்கு முன்பு இந்தியா - சீனா துருப்புகள் 100 முதல் 200 ரவுண்டுகள் வரை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மாஸ்கோவில் 10ம் தேதி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசியபோது பதற்றத்தை தணிப்பது குறித்து இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு, பாங்கோங் ட்சோ (Pangong Tso) நதியின் வடகரை பகுதியில் வானை நோக்கி இருநாட்டு படையினரும் துப்பாக்கியால் சுட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கில பத்திரிகை (The Indian Express) செய்தி வெளியிட்டுள்ளது.
7ம் தேதி சுசுலில் துப்பாக்கியால் சுட்டது குறித்து இருநாடுகளும் அறிவித்தபோதிலும் இதுகுறித்து அறிவிக்கவில்லை என அந்த அதிகாரி கூறியதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.