அமெரிக்காவில் மலை உச்சியில் இருந்து கயிறு கட்டிக் குதிக்கும் மரண விளையாட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறது.
அங்குள்ள யோஷிமைட் பள்ளத்தாக்குப் பகுதியில் உச்சத்தில் இருக்கும் பாறைகள் நிறைந்த பகுதிக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். பின்னர் சுமார் ஆயிரம் அடி நீளம் கொண்ட கயிற்றினைக் கட்டிக் கொண்டு 230 அடி பள்ளத்தை நோக்கி அவர்கள் திகிலுடன் குதிக்கின்றனர்.
ஆண், பெண் என்ற பேதமின்றி திகிலை விரும்பும் இளைஞர் கூட்டம் இங்கே பாறை முகட்டின் மேலிருந்து குதித்து பொழுதைப் போக்குகின்றனர். இந்த நிலையில் யோஷிமைட் பள்ளத்தாக்கில் ஆண்டுக்கு 200 பேர் வரை உயிரிழந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.