அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் ஆயிரக்கணக்கில் இறந்து விழுவது அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கொலராடோ, டெக்ஸாஸ் மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் பறந்து கொண்டிருந்த தவிட்டுக் குருவிகள், ராபின்கள், சிட்டுக் குருவிகள் உள்ளிட்ட பறவைகள் வானிலிந்து விழுந்து இறந்து வருகின்றன.
இறந்து போன பறவைகளின் எண்ணிக்கையை சரியாகக் குறிப்பிட முடியாவிட்டாலும், இதன் இறப்புக்கான காரணமும் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் எரியும் காட்டுதீயின் விளைவாக புகை மண்டலம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.