பிரேசிலில் உள்ள உலகின் மிகப்பெரிய ஈரநிலமான பாண்டனலில் 16 சதவீதம் தீயில் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமேசான் காட்டை விட சிறியதாக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பாண்டனல், பல்லுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இங்கு, கடந்த ஜூலை மாத மத்தியில் இருந்து தீப்பற்றி எரிந்து வருகிறது.
அமேசான் மழைக்காடுகளில் தீயினால் ஏற்பட்ட பாதிப்பை விட நான்கு மடங்கு அதிகமான பாதிப்பை பாண்டனல் சந்தித்துள்ளதை நாசா செயற்கைக்கோள்கள் புகைப்படங்கள் விளக்கி உள்ளன.