கொரோனா நெருக்கடி காலத்தில் ஆன்லைன் வியாபாரம் அதிகரித்துள்ள நிலையில், மேலும் ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசான், 8 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களுடன் கடந்த காலாண்டில் 40 சதவீத வருவாய் உயர்வு மற்றும் 26 ஆண்டு வரலாற்றில் மிகப்பெரிய இலாபத்தையும் ஈட்டியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிதாக 100 குடோன்களையும், செயல்பாட்டு தளங்களையும் திறக்க உள்ளது.