செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா : சீன ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Sep 14, 2020 01:28:17 PM

கொரோனா வைரஸ் வூகான் ஆய்வகத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள சீன ஆய்வாளர் ஒருவர், தம்மிடம் அதற்கு அறிவியல் ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

ஹாங்காங்கில் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய வைரஸ் ஆய்வாளரும், பின்னர் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று, கொரோனா விவகாரத்தில் சீன அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருபவருமான டாக்டர் லி-மெங், பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஹாங்காக்கில் இருந்தபோது, சீனாவில் சார்ஸ் போன்ற வைரஸ் பரவத் தொடங்கியது குறித்த ஆய்வுக்கு தாம் நியமிக்கப்பட்டதாகவும், புது வைரஸ் பரவுவது குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரிந்திருந்ததோடு, அதை மூடிமறைக்க முயற்சித்ததை தமது  ஆய்வில் கண்டறிந்ததாகவும் டாக்டர் லி-மெங் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரிலும், பின்னர் ஜனவரியிலும் ஆய்வு நடத்தி, தமது கண்காணிப்பாளராகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்த அதிகாரியிடம் அறிக்கை அளித்ததாகவும், அவரோ அதை வெளியில் சொன்னால் காணாமல் ஆக்கப்படுவாய் என மிரட்டியதாகவும் டாக்டர் லி-மெங் தெரிவித்துள்ளார்.

சீன ராணுவ ஆராய்ச்சி மையம் ஒன்று CC45 மற்றும் ZXC41 என்ற இரு கொரோனா வைரஸ்களை கண்டறிந்தது, அவற்றின் உயிரமைப்பை ஆய்வகத்தில் வைத்து மாற்றியே கோவிட்-19 வைரஸ் உருவாக்கப்பட்டது, விரைந்து பரவும் வகையில் அந்த வைரஸ் உருவாக்கப்பட்டது, உண்மையை மறைக்க வூகான் கடல் உணவுச் சந்தையில் இருந்து பரவியது போன்ற தோற்றத்தை உருவாக்கியது,

அதற்கு முன்னரே மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது என்ற விவரங்களை கண்டறிந்ததாகவும் அவர் விவரித்துள்ளார். ஹாங்காக்கில் சில விஞ்ஞானிகளுடன் இணைந்து தாம் கண்டறிந்த இந்த உண்மைகளுக்கு அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிட இருப்பதாகவும் டாக்டர் லி-மெங் கூறியுள்ளார்.


Advertisement
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது
கிழக்கு ஆப்பரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிப்பு
லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை
ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமியுடன் காதல்.. போக்சோவில் சிக்கிய 7 காதலர்கள்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..! போதும்.. போதும்... லிஸ்ட்டு பெருசா போகுது..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..


Advertisement