ஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீன நிறுவனமான பைட்டான்ஸூக்கு சொந்தமான டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது அந்த செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.
இந்த நிலையில் டிக் டாக் செயலியை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்த அமெரிக்காவின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விருப்பத்தை பைட்டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது.
மேலும், மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஆரக்கிளிற்கு டிக் டாக் செயலியை விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.