பெலிஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.
அந்நாட்டில் கொரோனா தொற்றால் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் நெருக்கடி சுகாதார அமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறியும், தங்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டியும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளுடன் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று கோஷமிட்டனர்.