சீனாவின் வூகான் நகரின் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டு கிருமியியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லி மெங் யான் என்பவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், வூகானில் உள்ள அரசு ஆய்வகத்தில் கொரோனா தொற்று கிருமி தயாரிக்கப்பட்டதாகவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சீன அதிகாரிகள் தன்னை மிரட்டியதால், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே குற்றச்சாட்டை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்தபோது சீனா மறுப்பை வெளியிட்டது.