ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி சோதனைக்கான, ஆட்சேர்ப்பு பணியை நிறுத்துமாறு சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் கோவிஷில்டு என்ற கொரேனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை 2 மற்றும் 3ம் கட்ட சோதனைகளுக்கான ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபடக்கூடாது என, அந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள சீரம் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.