அமைதிக்கான நோபல் பரிசுக்கு தான் பரிந்துரைக்கப்பட்ட செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் மறைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஹூக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட உதவியதற்காக அமெரிக்க அதிபருக்கு நோபல் பரிசு வழங்க நார்வே எம்.பி. கிறிஸ்டியன் டைப்ரிங்-ஜெஜ்டே (Christian Tybring-Gjedde) பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், தான் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதை தனது ஆதரவாளர்களிடம் நினைவுப்படுத்தினர்.