கொலம்பியாவில் மின்னதிர்ச்சி ஏற்படுத்தும் துப்பாக்கியால் காவல்துறையினர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்துப் பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் மது அருந்திவிட்டுத் தெருவில் சமூக இடைவெளியின்றி நடமாடிய ஆர்டோனேஸ் என்பவரைக் காவலர்கள் இருவர் பிடித்து மின்னதிர்ச்சி ஏற்படுத்தும் துப்பாக்கியால் தாக்கியுள்ளனர்.
தன்னை விட்டுவிடும்படி அவர் கெஞ்சியும் பலமுறை தொடர்ந்து மின்னதிர்ச்சி கொடுத்துக் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மின்னதிர்ச்சியால் நிலைகுலைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைக் கண்டித்து அவரின் உறவினர்களும் பொதுமக்களும் காவல்நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுடன் அங்கிருந்த வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர்.