நெதர்லாந்து அருகே பால்டிக் கடல் பகுதியில் மூழ்கிக் கிடந்த 400 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு பேரரசுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இந்தக் கப்பல் சரக்கு ஏற்றிச் செல்ல பயன்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் இத்தனை ஆண்டுகாலம் நீருக்குள் மூழ்கியிருந்தாலும் அந்தக் கப்பல் நல்ல நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறிய ஆய்வாளர்கள், இத்தனை ஆண்டுகாலம் தண்ணீரில் இருந்தாலும் அழியாமல் இருப்பதால் அந்தக் கப்பலைக் கட்ட பயன்படுத்தப்பட்ட மரம் குறித்தும் ஆய்வு நடத்த இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.