கடல்நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, கோடையில் பனிப்பாறைகள் உடைவதால் ஏற்படும் சேதம் ஆகியவை அண்டார்டிக் கடற்பாசிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக சிலி அண்டார்டிக் நிறுவனத்தின் அறிவியல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து 2018 ஆம் ஆண்டு முதல் அண்டார்டிகாவில் ஆய்வு மேற்கொண்ட கடல் உயிரியலாளர் சீசர் கார்டனாஸில் ஆய்வறிக்கை, மைக்ரோபயாலஜியில் எல்லைகள் (Frontiers in Microbiology) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன.
அதில் கடந்த 3 கோடைக்காலங்களில்,கடற்பாசி வகையான ஐசோடிக்டியா கெர்குலெனென்சிஸில் (Isodictya kerguelenensis) பல திசு சேதம் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்ததாக சீசர் தெரிவித்துள்ளார்.