அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
கலிபோர்னியா வனப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக பற்றி எரியும் காட்டுத் தீ சுமார் 20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை நாசப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் காட்டுத் தீ காரணமாக மின்சாரம் வழங்கி வரும் போர்ட்லேண்ட் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
நெருப்பின் தாக்கத்தால் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாகவும், பல நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மின்சார அவசரநிலையைப் பிறப்பித்துள்ள அதிபர் டிரம்ப், மின் உற்பத்தி நிலையங்கள் முழுவீச்சில் இயங்க அனுமதியளித்துள்ளார்.