அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அதிபர் டிரம்ப் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்து குறித்து டிரம்ப் எந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் அதை நம்பப் போவதில்லை என்று கமலா ஹாரிஸ் கூறியதை மேற்கோள் காட்டிய டிரம்ப், அவரால் அதிபர் பதவிக்கு ஒருபோதும் வரமுடியாது என்று சாடினார்.
தடுப்பு மருந்து குறித்த தவறான கருத்தைப் பரப்பியதற்காக அவர் பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
கமலா ஹாரிஸ் போட்டிக்கு தகுந்த நபர் அல்ல என்றும் அவர் அமெரிக்கப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்து விடுவார் என்றும் டிரம்ப் தமது பேச்சில் குறிப்பிட்டார்.