பஹ்ரைனில் பணியாற்றும் போது சுமார் தொண்ணூற்று ஏழரை லட்சம் ரூபாய் கையாடல் செய்த இந்தியர் மீது, இந்தியாவில் விசாரணை நடத்துவதற்கான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜீவ் ரங்கநாதன் என்பவர் கடந்த 2016ல் பஹ்ரைனில் பணியாற்றிய போது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர்இந்தியாவுக்கு அவர் தப்பிவிட்ட நிலையில், பஹ்ரைன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை அடுத்து அவரை ஒப்படைக்குமாறு பஹ்ரைன் அதிகாரிகள் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் நாடு கடத்தும் சட்ட பிரிவின்படி அவரை பஹ்ரைனிடம் ஒப்படைக்க இயலாது என்றாலும், இதே குற்றம் இந்தியாவிலும் தண்டனைக்குரியது என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ க்கு உத்தரவிடப்பட்டது.