ஆஸ்திரேலியாவின் முன்னணி செய்தியாளர்கள் இருவர், சீன வெளியுறவு அமைச்சகத்தால் தனித்தனியாக விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சொந்த பாதுகாப்பிற்காக நாடு திரும்பியதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் உளவு பார்த்ததாக ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான செங் லீ கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த செய்திகளை வெளியிட்ட ஏபிசியின் பில் பிர்டில்ஸ், ஏஎஃப்ஆர் செய்தி நிறுவனத்தின் மைக்கேல் ஸ்மித் ஆகிய ஆஸ்திரேலிய வெளிநாட்டு செய்தியாளர்கள் 2 பேர், சீனாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் உள்ள தூதரகத்தின் உதவியுடன் பில் பிர்டில்ஸ், மைக்கேல் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலியா திரும்பி உள்ளனர்.