ரஷ்ய அரசு நிறுவனமான கேமாலயாவின் Sputnik V கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
தேவையான தகுதிச் சோதனைகளுக்குப் பிறகு இந்த தடுப்பூசி வெளியிடப்பட்டுள்ளதாகவும், மண்டலவாரியான விநியோகம் விரைவில் துவங்கும் எனவும் ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
Sputnik V தடுப்பூசியை உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி என்று ரஷ்யா கடந்த 11 ஆம் தேதி பதிவு செய்தது. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அது இப்பொது வெளியிடப்பட்டுள்ள நிலையில்,மாஸ்கோவாசிகளுக்கு சில மாதங்களில் Sputnik V தடுப்பூசி போடப்படும் என அதன் மேயர் அறிவித்துள்ளார்.