பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்களை சீனா பயன்படுத்துவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சீனா தொடர்பான ராணுவ பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வலுவான வெளிநாட்டு ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ராணுவ சக்தியை மேம்படுத்தவும் சீனா திட்டமிட்டு வருவதாகத் கூறப்பட்டுள்ளது.
முப்படைகளையும் வலுப்படுத்த மேலும் பல்வேறு வெளிநாட்டு ராணுவத் தளவாடங்களை சீனா பயன்படுத்தி வருவதாகவும், அவற்றில் மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.