அமெரிக்காவில் வெள்ளையருக்கு ஒரு நீதி, கருப்பருக்கு ஒரு நீதி உள்ளது என ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேடியளித்த அவர், அமெரிக்காவில் நீண்ட காலமாகவே இந்த பாரபட்சம் காட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் அப்படியொரு நிலை இல்லை என்று இப்போதைய ஆட்சியாளர்கள் கூறிவருவருவதாக் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தின் கீழ் கருப்பினத்தவருக்கும், வெள்ளையினத்தவருக்கும் ஒரே விதமான, சமமான நீதி கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.