சீனாவில் பெரிய லாரி ஒன்றின் அடியில் சிக்கிய 6 வயது சிறுவன் பலத்த காயங்கள் இன்றி உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கட்டிடம் ஒன்றின் முன்பு நகர்ந்து வந்த லாரியின் அடியில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சிக்கிக் கொண்ட நிலையில், தரையில் உருண்டு சாமர்த்தியமாக வெளியேறி உயிர் தப்பினான்.
சிறுவன் கீழே சிக்கியது தெரியாமல் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.