அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான நோவோக் ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பப்லோ கரெனோ புஸ்டாவை (Pablo Carreno Busta) எதிர்கொண்ட ஜோகோவிச், முதல் சுற்றில் 5-6 என பின்தங்கியிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் அடித்த பந்து, எல்லைக் கோட்டை கண்காணிக்கும் நடுவரின் தொண்டையில் பலமாக தாக்கியதில், அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து, ஆட்டத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், ஜோகோவிச் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், 4வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பட்டத்தை கைப்பற்றும், ஜோகோவிச்சின் கனவு கலைந்தது.