தன்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட செய்தியாளரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென Fox News நிறுவனத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
முதலாம் உலகப் போரின் போது உயிர்த்தியாகம் செய்த அமெரிக்க கடற்படை வீரர்களை தோல்வியாளர்கள் என்றும், தரக்குறைவாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டதாகவும், 2018ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற அவர் அமெரிக்க வீரர்களின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதை தவிர்த்ததாகவும் தி அட்லாண்டிக் இதழில் செய்தி வெளியானது.
சீரற்ற வானிலை காரணமாக ட்ரம்ப் நினைவிடத்துக்கு செல்லவில்லை என அதிகாரி ஒருவரும் விளக்கமளித்தார். இதனிடையே இந்த செய்தியால் கடும் கோபத்துக்கு ஆளான அதிபர் ட்ரம்ப், தனது தரப்பில் விளக்கம் கேட்காமல் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளரை Fox News நிறுவனம் பணிநீக்கம் செய்ய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் வியட்நாம் போரை குறிப்பிட்டதை தான், முதல் உலகப் போருடன் தொடர்புபடுத்துவதாகவும் அதிகாரிகள் சிலர் விளக்கமளித்துள்ளனர்.