மெக்சிகோவில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறையை கண்டித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மேலும் ஒரு திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சியுடாட் ஜுவரெஸில் உள்ள சிவாவா என்ற இடத்தில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மிரேயா ரோட்ரிக்ஸ் லெமஸ் என்பவர் கடந்த 2 ஆம் தேதி கொலை செய்யப்பட்டதையடுத்து, நீதி மற்றும் பாதுகாப்பு கோரி அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துக்கு முன்பு திருநங்கைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மற்றொரு திருங்கை அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு, மெக்ஸிகோவில் 117 ஒரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வெறுப்புணர்வு காரணமாக கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.