சீனாவில் மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளியில் புதிய யுக்தி கையாளப்படுகிறது.
மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தின் நன்யாங் பகுதியில் சிறு வயதிலேயே மாணவர்கள் கிட்டப் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 14 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் 6 வயதிற்குள்ளாகவே கண்ணாடி அணியும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் அங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் புத்தகங்களை தலையில் சுமந்து கொண்டு எழுதும் வீடியோ வெளியானது.
இதற்கு பதிலளித்துள்ள ஆசிரியர்கள், தலையில் உள்ள புத்தகங்கள் விழாமல் நோட்டுகளில் எழுதும்போது, மாணவர்கள் புத்தகங்கள் சறுக்காமல் மேலும், கீழும் பார்த்துக் கொள்வதால் அவர்களுக்கு கிட்டப்பார்வை குறைபாடு சரியாவதாகத் தெரிவித்துள்ளனர்.