அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு ஆதரவாக நடைபெற்ற படகு போட்டியின் போது எதிர்பாராதவிதமாக 4 படகுகள் நீரில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்டின் நகரில் உள்ள டிராவிசில் ஏரியில் டிரம்புக்கு ஆதரவாக பிரமாண்டமாக படகு போட்டி நேற்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்ட போட்டியில் எதிர்பாராதவிதமாக 4 படகுகள் ஏரியில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.