மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது மூன்று நாள் ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு ஈரான் தலைநகர் தெஹ்ரானை சென்றடைந்தார்.
அங்கு அவர் இன்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹதாமியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வளைகுடா நாடுகள் தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமாக களைய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இக்கருத்தை ராஜ்நாத்சிங்கும் மாஸ்கோவில் எதிரொலித்தார். அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் குறித்து இந்திய அரசு தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது.