இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான சட்ட திருத்தத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2015-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்டசட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான 20-வது சட்ட திருத்தத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதன்படி இலங்கை அதிபர் விரும்பினால் நாடாளுமன்றத்தை கலைக்கலாம்.
பிரதமர், அமைச்சர்களை அதிபர் பதவி நீக்கம் செய்யலாம். அதிபருக்கு எதிராக விசாரணை நடத்த யாரும் உத்தரவிட முடியாது என்பது உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளன.