அமெரிக்க அதிபர் தேர்தலில் இடையூறு மேற்கொள்ள சீனா மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளதாக வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய 3 நாடுகள் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுக் குழுவின் தகவலை மேற்கோள் காட்டி, வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சீனா பெரிய இணைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு எதிராக வலுவான நடவடிக்கையை அமெரிக்க எடுத்துவருவதாகவும் அதில் வெற்றிபெறும் என்றும் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.