பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் லெப்டினென்ட் ஜெனரல் அசிம் சலீம் பஜ்வா, ஊழல் புகாரால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பஜ்வா, பிரதமரிடம் தனது ராஜினாமா கடித்தை கொடுக்க உள்ளதாகவும் அதே சமயம், சிபிஇசி எனப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார ஆணையத்தின் தலைவராக தனது பணியைத் தொடர உள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே பஜ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு மற்றும் மோசடி புகாரால் தான் பதவி விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.