வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 29 ஆயிரத்து 347 கோடி ரூபாயை முதலீடு செய்வது குறித்து அமேசான், வெரிசோன் ஆகிய நிறுவனங்கள் பேச்சு நடத்தி வருகின்றன.
வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்கு 50 ஆயிரத்து 399 கோடி ரூபாய் நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது.
ஒருமுறை செலுத்தும் கட்டணத்தால் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 25 ஆயிரத்து 460 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இணையவழியில் பொருட்களை விற்கும் அமேசான் நிறுவனமும், அமெரிக்காவில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் வெரிசோன் நிறுவனமும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 29 ஆயிரத்து 347 கோடி ரூபாயை முதலீடு செய்து அதன் பங்குகளை வாங்குவதற்குப் பேச்சு நடத்தி வருகின்றன.