ஜிம்பாப்வேயில் 22 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பாக்டீரியா தொற்று காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாண்டமாசுவே வனப்பகுதியில் கடந்த வாரம் சில யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. அதை விட 2 மடங்கு அதிக எண்ணிக்கையில் விளையாட்டு பூங்கா அருகே கடந்த 2 நாட்களில் இளம் மற்றும் 18 வயதுக்குட்பட்ட யானைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்டையாடுதல், சயனைடு விஷத்தால் யானைகள் உயிரிழந்ததாக பரவும் செய்திக்கு வனவிலங்கு மேலாண்மை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.