உய்குர் முஸ்லீம்கள் மீதான சீனாவின் ஒடுக்குமுறை குறித்து அதன் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானே அமைதி காக்கும் நிலையில், இவ்விவகாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலித்துள்ளது.
உய்குர் முஸ்லீம்கள் அதிகளவில் வசித்து வரும் ஜின்ஜியாங் மாகாணத்தில் தொழில்சார் பயிற்சி முகாம்களை நிறுவியுள்ள சீன அரசு, தங்கள் மத அடையாளங்களை கைவிட வலியுறுத்தி உய்குர் முஸ்லீம்களை துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
இவ்விவகாரம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் சீனாவின் ஒடுக்குமுறையை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
முன்னதாக பயிற்சி முகாம்கள் எனும் பெயரில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லீம்களை சீனா அடைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.