அமெரிக்கக் கடற்படைக்கு சரக்கு எடுத்துச் சென்ற பழைய கப்பல் ஒன்று குண்டு வெடிப்பு மூலம் மூழ்கடிக்கப்பட்டது.
யுஎஸ்எஸ் டர்ஹாம் என்ற அந்தக் கப்பல் 1969ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் அமெரிக்கக் கடற்படைக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதில் இந்தக் கப்பல் பெரும்பங்காற்றியது.
94ம் ஆண்டுக்குப் பின்னர் பணியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்தக் கப்பல் தற்போது இறுதியாக பசிபிக் கடலில் நடந்துவரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் பயிற்சிக்குச் சென்றது. பயிற்சியின் முடிவில் யுஎஸ்எஸ் டர்ஹம் கப்பல் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.