எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனா தயாராக இருப்பதாக கூறி உள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆனால், அங்கு பதற்றம் ஏற்படுவதற்கு இந்தியாவே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில், யதார்த்த கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே, பாங்கோங் ஏரியின் தெற்கு கரையிலும், ரெக்கின் கணவாயிலும் புதிதாக பதற்றத்தை ஏற்படுத்துவதாக, சீனா மீது இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், பாரிசில், பிரெஞ்சு சர்வதேச உறவு கழகத்தில் பேசிய வாங் யி, இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளை கட்டுப்படுத்துவதுடன் அது மோதலாக மாறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இந்திய-சீன எல்லையில், பிரச்சனைக்குரிய பகுதிகளில் நிலைத்தன்மை தொடர வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.