ஐரோப்பிய நாடான மான்டனேக்ரோவில் ஆளும் கட்சியைக் கண்டித்து பிரமாண்டமான பேரணி நடத்தப்பட்டது.
அங்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் மிலோ ஜுகானோவிச்சின் மேற்கத்திய சார்பு கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆனால் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைக்க முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் போட்கோரிகாவில் நடந்த போராட்டத்தின் போது நெருப்பினைப் பற்றவைத்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.